தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நல நிதிக்காக சென்னையில் தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்களின் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டியில் இடம் பெற உள்ள அணிகளின் பெயர்கள், கேப்டன்கள் பற்றிய தகவல்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்தன.
எந்தெந்த அணிக்கு யார் யார் கேப்டன் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி,
சென்னை சிங்கம்ஸ் – சூர்யா
மதுரை காளைஸ் – விஷால்
கோவை கிங்ஸ் – கார்த்தி
நெல்லை டிராகன்ஸ் – ஜெயம் ரவி
ராம்நாட் ரைனோஸ் – விஜய் சேதுபதி
தஞ்சை வாரியர்ஸ் – ஜீவா
சேலம் சீட்டாஸ் – ஆர்யா
திருச்சி டைகர்ஸ் – சிவகார்த்திகேயன்
ஆகியோர் செயல்பட உள்ளார்கள்.
எந்த அணியில் யார் யார் விளையாட உள்ளார்கள் என்பதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.