விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக இணைந்து நடிக்கம் இன்னமும் பெயரிடப்படாத விஜய்யின் 60வது திரைப்படம் இன்று படப்பிடிப்புடன் ஆரம்பமானது.
“எங்க வீட்டு பிள்ளை, உழைப்பாளி, நம்மவர், தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த பிரபல நிறுவனமான விஜயா புரொடக்சன்ஸ் சார்பில் B. வெங்கட்ராம ரெட்டி வழங்க B.பாரதி ரெட்டி தயாரிக்கும் படம் இது.
விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் மீண்டும் இந்தப் படம் மூலம் விஜய்யுடன் இணைகிறார். விஜய் நடிக்கும் ஒரு படத்திற்கு முதன் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.
வில்லன்களாக ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி நடிக்கிறார்கள். தம்பி ராமையா, சதீஷ், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சுகுமார் ஒளிப்பதிவு செய்ய கே.எல். பிரவீன் படத் தொகுப்பு செய்கிறார்.
இன்றும் நாளையும் நடக்கும் படப்பிடிப்பு மீண்டும் அடுத்த மாதம் நடக்க உள்ளது.