‘கபாலி’ டீசர், காத்திருக்கும் ரசிகர்கள்

ரஜினிகாந்த் ரசிகர்கள் நாளை காலை 11 மணி எப்போது வரும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய இளம் தலைமுறை இயக்குனரான பா.ரஞ்சித்துடன் ரஜினிகாந்த் இணைந்துள்ள ‘கபாலி’ டீசர் யு டியூபில் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

யு டியூபில் கூட டீசர், டிரைலர்களுக்கு மிகப் பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது ரஜினிகாந்த்தான்.

அவர் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் டீசர், டிரைலர்கள்தான் யு டியூபில் பல லட்சங்களைத் தாண்டிய சாதனையை முதல் முதல் படைத்தது.

இன்றைய கமர்ஷியல் ஹீரோக்களான அஜித், விஜய் கூட ரஜினிகாந்த் வழியில்தான் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்குமே ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தின் மீது எப்போதுமே ஒரு கண் உண்டு.

ஆனாலும், ரசிகர்கள் ரஜினிகாந்தை மட்டுமே சூப்பர் ஸ்டார் என்றழைக்க விரும்புகிறார்கள்.

இதுவரை வெளிவந்த அனைத்து டீசர் சாதனைகளையும் ‘கபாலி’ டீசர் முறியடிக்கும் என இப்போதே பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாளை யு டீயூப் கூட சில மணி நேரங்கள், “Due to Kabali Teaser storm youtube itself gets the most views’ என செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

Read Previous

Get ready for Kabali teaser

Read Next

Kabali – Official Teaser – Video

Most Popular