‘கபாலி’ திரைப்படத்தின் டீசர் மிகக் குறுகிய நாட்களில் இந்தியாவில் அதிக அளவில் பார்க்கப்பட்ட டீசர், அதிகம் பேரால் லைக்ஸ் செய்யப்பட்ட டீசர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது.
கடந்த 1ம் தேதி காலை யு டியூபில் வெளியிடப்பட்ட இந்த டீசர் உலக அளவில் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தைத் தன் பக்கம் இழுத்தது.
இதுவரை 1 கோடியே 74 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த டீசரை கண்டுகளித்துள்ளனர். 4 லட்சம் பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளனர்.
இந்தியத் திரையுலகில் இதுவரை அமீர்கான் நடித்த ‘தூம் 3’ டீசரை 1 கோடியே 70 லட்சம் பேர், சல்மான் கான் நடித்து வரும் ‘சுல்தான்’ டீசரை 1 கோடியே 71 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
அந்த சாதனையை முறியடித்து தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது ‘கபாலி’ டீசர். அது மட்டுமல்ல அதிகமானோர் லைக் செய்த டீசராகவும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இப்படி ஒரு சாதனையை ‘கபாலி’ டீசர் படைத்திருப்பது இந்தியத் திரையுலகத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.