ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக அறிமுகமான படம் ‘பென்சில்’. ஆனால், அந்தப் படத்திற்கு முன்பாகவே அவர் நாயகனாக நடித்த இரண்டு படங்கள் வெளிவந்துவிட்டன.
‘பென்சில்’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தைப் பார்த்த இளைஞர்கள் இது ‘4th Period Mystery’ என்ற கொரியன் படத்தின் காப்பி என சமூக வலைத்தளங்களில் பகிர ஆரம்பித்தார்கள்.
அதன் பின் நாம் அந்தக் கொரியன் படத்தின் கதையையும், டிரைலரையும் கூகுள் செய்து பார்த்த பிறகு அது உண்மைதான் எனத் தெரிய வந்தது.
படத்தை அப்படியே காப்பியடித்து அதை தமிழ்நாட்டுக்கு ஏற்றபடி சில சிறிய மாற்றங்களைச் செய்து தயாரித்து வெளியிட்டுள்ளார்கள்.
இப்படத்தை இயக்கியுள்ள மணி நாகராஜ், இயக்குனர் கௌதம் மேனனின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீக காலமாக தமிழ்த் திரைப்படங்கள் உலக அளவில் வெளியாவதால் உலக அளவில் அது பற்றித் தெரிய வருகிறது.
இப்போது ‘பென்சில்’ திரைப்படமும் அப்படி காப்பியடிக்கப்பட்டுள்ளதால் புதியதாக ஏதும் பிரச்சனை வரவும் வாய்ப்புள்ளது. இப்படித்தான் ‘தெய்வத் திருமகள்’ படத்தை ஆங்கிலப் படத்திலிருந்து காப்பியடித்தார்கள். பின்னர் சைலன்ட்டாக 1 கோடி ரூபாய்க்கு மேல் கதை உரிமைக்காகச் ‘செட்டில்’ செய்தார்கள் என்று சொல்லப்பட்டது-
இப்போது ‘பென்சில்’ படத்தின் கொரியன் படத் தயாரிப்பாளர்களுக்கு இது பற்றி தெரிய வந்தால் எத்தனை கோடி கேட்பார்களோ ?….
உங்களுக்காக…
பென்சில் பட டிரைலர்…
கொரியன் பட டிரைலர்
https://youtu.be/ZF-ndyxHorQ