மகேஷ்பாபு, சமந்தா, காஜல் அகர்வால், பிரணீதா மற்றும் பலர் நடிக்க சுரேஷ் அடாலா இயக்கத்தில் வரும் 20ம் தேதி தெலுங்கில் வெளியாக உள்ள படம் ‘பிரம்மோற்சவம்’.
இந்தப் படத்தை ஒரே சமயத்தில் தெலுங்கு, தமிழில் எடுக்கப் போவதாக படத்தை ஆரம்பித்த போது விளம்பரப்படுத்தினார்கள். அதன் பின் ஒரு சில செய்திகளையும் அளித்தார்கள்.
ஆனால், இன்னும் இரண்டு நாளில் தெலுங்கில் வெளியாக உள்ள இந்தப் படம் தமிழில் வெளிவருவதற்கான எந்த வித அறிகுறியும் தென்படவில்லை.
தமிழில் எடுப்பதாக விளம்பரப்படுத்தப்பட்ட படம் தமிழில் எடுக்கப்படவேயில்லையா, அல்லது அன்று அப்படி சொன்னது பொய்யா என்பதை யாராவது விளக்கினால்தான் உண்டு.
இருந்தாலும் தெலுங்கில் ‘பிரம்மோற்வம்’ மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.