நடிக்கப் போய்விட்ட விஜயகாந்த்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டு அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

இந்தத் தேர்தலில் மூன்றாவது அணியாக மக்கள் நலக் கூட்டணி ஒன்று உருவாகி அதன் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.

இந்தத் தேர்தலில் இந்த அணி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படுதோல்வியடைந்து விஜயகாந்தின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியானது.

மாநிலக் கட்சி அந்தஸ்தைக் கூட விஜயகாந்தின் தேமுதிக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சில மணி நேரங்களுக்கு முன் விஜயகாந்த் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ‘தற்போது தமிழன் என்று படப்பிடிப்பில்’ என்ற தகவலுடன் சில புகைப்படங்களைப் பகிரிந்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே விஜயகாந்த் சினிமாவில் நடிக்கப் போயிருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

vijayakanth in shootingvijayakanth latest photo

Read Previous

Maruthu – Review

Read Next

Kanavu Variyam wins 6 International Awards