பவர்ஸ்டாரின் ‘டார்கெட்’ அனுஷ்கா, த்ரிஷா…

‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் நான் வில்லத் தனம்ன கேரக்டர்ல நடிச்சிருந்தாலும், அடிதடி பைட் எல்லாம் கிடையாது. ஆனால் படம் முழுக்க டயலாக் பைட் இருக்கு.

அரசு பிலிம்ஸ் தயாரிப்பில் திரைவண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பவர்ஸ்டார் மற்றும் பலரது நடிப்பில் சினிமா பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘அட்ரா மச்சான் விசிலு’.

இந்தப் படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற கேரக்டரில் நடிகராக நடித்திருக்கிறார் பவர்ஸ்டார்.

பரபரப்பாக பேசப்பட்டு, பின்னர் அதிகப் படங்களால் பின்னால் போன பவர்ஸ்டார் இந்தப் படம் மூலம் மீண்டும் பரபரப்பாகப் பேசப்படுவார் என்கிறார்கள்.

படம் பற்றி அவர் நம்மிடம் பகிர்ந்த சில விஷயங்கள்….

‘அட்ரா மச்சான் விசிலு’ படத்துல ‘சூப்பர் ஸ்டார்’ கேரக்டர்ல நடிச்சிருக்கேன். கதைக்கு என்ன டயலாக் தேவைப்பட்டுச்சோ, டைரக்டர் என்ன டயலாக் கொடுத்தாரோ அதை மட்டும் தான் பேசிருக்கேன்.. மற்றபடி தனிப்பட்ட முறைல யாரையும் தாக்கி பேசலை.

வித்தியாசமா பண்ணிருக்கேன்.. மத்தபடி காமெடிப் படம்ங்கிறதால ஸ்டைல்னு தனியா ஏதும் பண்ணல.. ஆனா எக்கச்சக்க ‘பஞ்ச்’ இருக்கு.. ரொம்ப நாளா இல்லாம இருந்த பஞ்ச் இதுல நிறைய வந்திருக்கு.. இந்தப்படம் வெளியாச்சுன்னா இனி குழந்தைகள் பேசுறது எல்லாம் நம்ம பஞ்ச்சாத்தான் இருக்கும்னா பாத்துக்குங்க.

‘பன்ச்’ வசனம் எழுத தனியாக எந்த டீமும் என்னிடம் இல்லை. இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை. ஆனா நிச்சயம் வைப்பேன். அதுக்கான காலம் சீக்கிரம் வந்துரும்.. என்னோட லட்சியம்னு பார்த்தீங்கன்னா அனுஷ்கா கூடவும் த்ரிஷா கூடவும் ஹீரோவா நடிக்கனுங்கிறதுதான்.

இந்தப்படத்தோட தயாரிப்பாளர் கோபி கூட என்னோட அடுத்த படத்துக்காக அனுஷ்கா கிட்டேயும் த்ரிஷா கிட்டேயும் பேசிக்கிட்டு இருக்கிறார். அவங்க கிடைக்காட்டியும் கூட, அவங்க பேர்ல வேற யாராவது இருந்தால் அவங்களையாவது கமிட் பண்ணுங்கன்னு சொல்லி வச்சிருக்கேன்..

சூப்பர்ஸ்டார் கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.. ஆனால் ஒரு ஹீரோயின் கூட கொடுக்கல சார்.. இந்தப் படத்துலன்னு இல்ல.. எல்லா படத்துலயும் ஹீரோயின் மட்டும் தரவே மாட்டேங்கிறாங்க.. ஐட்டம் சாங்கா தர்றாங்க.. ஆனா தனியா ஆட விட்டுடுறாங்க.. என்ன சார் வெறும் ட்ராக்காவே முடிச்சிடுறீங்களேன்னு கேட்டா, சார் உங்களுக்காகவே தனியா பாட்டு வச்சிருக்கோம், அத பாருங்க சார்னு நம்மள சமாளிச்சு அனுப்பிடுறாங்க..

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்துல சந்தானத்தோட நடிச்சப்ப எப்படி ஜாலியா இருந்துச்சோ அதே மாதிரி இந்தப்படத்துல சிவாவோட காம்பினேஷன் சூப்பரா வந்திருக்கு. அவரு அசராம கலாய்ப்பாரு.. நானும் அசராம கவுண்டர் கொடுப்பேன்.. ஷூட்டிங் ஸ்பாட்டே சும்மா அதிருமுல்ல.. சிவா தான் ஹீரோன்னாலும் கூட எனக்காக ஸ்பெஷலா ஒரு பாட்டே எடுத்திருக்காங்க..

ஆனா நம்புங்க சார்.. நான்லாம் சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்.. சிங்கிள் டேக்ல ஒகே பண்ணுனேன்.

‘அட்ரா மச்சான் விசிலு’ டைரக்டர் அற்புதமான டைரக்டர். இந்த படத்துல என்னோட கேரக்டரை என்னை மைண்ட்ல வச்சு எனக்காகவே உருவாக்கிட்டு எங்கிட்ட வந்தார்.. ஸ்பாட்ல எங்ககிட்ட இருக்குற நடிப்பை நாங்க எப்படி வெளிப்படுத்துறோமோ அதுல பெஸ்ட்டா இருக்கிறத அழகா எடுத்துக்குவார்.. இந்தப்படம் வெளியாச்சுன்னா என்னோட ரசிகர்களுக்கு நிச்சயம் அது திருவிழாவாத்தான் இருக்கும்.

பவர் ஸ்டார் பிறந்தநாளை தேசிய நாளாக அறிவிக்கணும்னு மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்னு இந்தப்படத்துல சிவா ஒரு சீன்ல சொல்லிருக்கார்.. தம்பிக்கு நன்றி.. அது என்ன தேசிய நாள் என்பதை படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க.. அதுவரைக்கும் சஸ்பென்ஸ்.. இதையும் மறக்காம ரசிகர்கள் கிட்ட சொல்லிருங்க,” என அசராமல் அடிக்கிறார் பவர்ஸ்டார்.

ஜுலை 7ம் தேதி ‘அட்ரா மச்சான் விசிலு’ வெளியாகிறது.

Read Previous

Veera Sivaji Official Teaser

Read Next

திருட்டு விசிடி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் கேள்விகள்

Most Popular