‘கபாலி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ், 22ம் தேதி ரிலீஸ்

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்துள்ள ‘கபாலி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் இப்படம் சென்சார் குழுவினருக்குக் காட்டப்பட்டது.

சற்று முன்னர் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

“கொண்டாட்டம் ஆரம்பம்…‘கபாலி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் 152 நிமிடங்கள்” என்று அவர் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

2 மணி நேரம் 32 நிமிடங்கள் ஓடக் கூடிய வகையில் ‘கபாலி’ படம் அமைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியான ஒன்று.

படம் சென்சார் முடிவடைந்ததையடுத்து படம் ஜுலை 22ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என படத் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

 

Read Previous

Harris Jayaraj joins Vijay’s next

Read Next

Shruti new avatar in S 3