பிரசாத் லேப் தியேட்டர் புத்தம் புதுப் பொலிவுடன் தயாராகி வருகிறது. இந்த செய்தி திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொண்டாட்டமான ஒரு செய்தி.
படத்தை இயக்கும் இயக்குனர்களும், படமாக்கும் ஒளிப்பதிவாளர்களும், ஒலியைச் சேர்க்கும் ஒலிப்பதிவாளர்களும் தங்களது படைப்பு எப்படி வந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள தேடுவது நல்ல தியேட்டர்களை.
மக்கள் பார்க்க தியேட்டர்களுக்கு வரும் முன் அது பிரிவியூ தியேட்டர் என்றழைக்கப்படும் தியேட்டர்களில் திரையிடப்பட்டு சோதனை செய்யப்படும். அதற்கு தரமான அனைத்து வசதிகளும் கொண்ட பிரிவியூ தியேட்டர்கள் தேவை.
சென்னையில் விரல் விட்டு எண்ணக் கூடிய தியேட்டர்கள்தான் உள்ளன. அதில் குறிப்பாக சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டர்.
இங்கு படத்தைத் திரையிட்டு பார்ப்பதற்கு தொழில்நுட்பக் கலைஞர்களும், பத்திரிகையாளர் காட்சியைப் பார்ப்பதற்கு பத்திரிகையாளர்களும் மிகவும் விரும்புவர்.
அவர்களது விருப்பத்தை மேலும் அதிகமாக்கும் முயற்சியில் புதிதாக மேலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கல்யாணம், பிரசாத் லேப் நிர்வாக இயக்குனரான ரமேஷ் பிரசாத் ஆலோசனையுடன்யி செய்ய ஆரம்பித்தார்.
கியூப், பிஎக்ஸ்டி தொழில்நுட்ப திரையிடல், டால்பி அட்மாஸ் ஒலி நுட்பம், சர்வதேசத் தரத்தில் திரை, தியேட்டர் உள் அழகிய வேலைப்பாடுகள் ஆகியவை கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வருகிறது.
இன்னும் சில நாட்களில் புதிய பொலிவுடன் தயாராகி வரும் பிரசாத் லேப் திறக்கப்பட உள்ளது.