தமிழ்த் திரையுலகத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஒரு நடிகராக தன்னை வளர்த்துக் கொண்டு வருபவர் விஜய் சேதுபதி.
படத்துக்குப் படம் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய முத்திரையைப் பதித்து வருகிறார்.
தனுஷ் தயாரித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நாயகனாக நடித்த விஜய் சேதுபதி தற்போது தனுஷுடன் சேர்ந்து ‘வட சென்னை’ படத்தில் அதிக நேரம் வரும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
இதை சற்று முன் தனுஷும் உறுதி செய்தார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்த ‘புதுப்பேட்டை’ படத்தில் துணை நடிகர்களில் ஒருவராக நடித்த விஜய் சேதுபதி தற்போது தனுஷுடன் சேர்ந்து நடிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் என்றால் அவருடைய திறமையைப் பாராட்டியே ஆக வேண்டும்.