தனுஷ் வியந்த நடிகர் சுதீப்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சுதீப், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது.

தமிழ் சினிமாவின் இன்றைய நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கும் தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டனர். மூவரும் முதல் முறையாக ஒரு திரைப்பட நிகழ்வில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இது.

விழாவில் தனுஷ் பேசியதாவது,

“எனக்கு கிச்சா சுதீப் அவர்களை மிகவும் பிடிக்கும். நான் ஈ படத்தில் அவரின் நடிப்பை கண்டு வியந்தேன். நான் எந்த ஓர் நடிகரின் நடிப்பை பார்த்தும் வியந்து அவர்களுக்கு போன் செய்து பேசியது இல்லை. ஆனால் கிச்சா சுதீப் அவர்களுக்கு போன் செய்து அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

‘நான் ஈ’ படத்தைப் பார்த்த மாபெரும் இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் நான் இந்த வருடம் தேசிய விருது தேர்வுக்குழுவில் இருந்திருந்தால் சுதீபுக்கு நிச்சயம் நேஷனல் அவார்ட் கொடுத்திருப்பேன் என்று கூறினார். அதை இதுவரை நான் சுதீப் சாரிடம் சொன்னதில்லை. அதைப் பற்றி சரியான இடத்தில் சொல்ல வேண்டும் என்று காத்திருந்தேன், அந்த நேரம் இதுதான் என்று நினைக்கிறேன்.

எனக்கு சில நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்று அசை உண்டு, சிவாவுடன் நான் நடித்துவிட்டேன், விஜய் சேதுபதியுடன் நடித்து விட்டேன், மிக விரைவில் மீண்டும் நாங்கள் இனைந்து நடிக்கவுள்ளோம். அதே சமயம் எனக்கு கிச்சா சுதீப்புடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகம் உண்டு,” என்று கூறினார்.

Read Previous

Dhanush’s Telugu encounter

Read Next

Veera Sivaji nearing completion