‘தர்மதுரை’ – அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு

‘ஜோக்கர்’ படத்தைப் பார்த்து திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டினார்.

தற்போது இன்று வெளியாகியுள்ள ‘தர்மதுரை’ படத்தை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஸ்டுடியோ ஆகியோர் பார்த்து பாராட்டியுள்ளனர்.

ஸ்டுடியோ 9 சுரேஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சீனு ராமிசாமியின் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘தர்மதுரை’ படம் அவர்களுக்காக பிரத்தியேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது.

தன் மருத்துவ குடும்பத்துடன் படம் பார்த்த பா.மா.கா தலைவர் நெகிழ்ந்து மனதார பாராட்டி பேட்டியும் தந்துருக்கிறார்கள். மருத்துவர்கள் படம் என்பதால் அதுவும் பா.ம.க தலைவரின் இப்பேட்டியால் படத்திற்கு நல்ல முக்கியத்துவம் கிடைக்கும் என தர்மதுரை படக்குழுவினர் மகிழ்ந்துள்ளார்கள். .

“நல்ல கதை, நன்றாக இயக்கியுள்ள படம். தனியார் மற்றும் அரசு கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் தர்மதுரை,” என்று மருத்துவர் ராமதாஸ் ‘தர்மதுரை’ படத்திற்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

“நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவத்தை தர்மதுரை தருகிறது,” என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

“ஒரு குடும்பத்தின் உணர்ச்சி மோதல்களை மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார். சமூக நல்லிணக்கம், திருநங்கை மறுவாழ்வு, காதல் ஆகியவற்றை அழகாக சித்தரிக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி சீனு ராமசாமி” என்று தர்மதுரை படத்தைப் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் புகழ்ந்தார்.

Read Previous

பிரம்மாண்ட வெளியீட்டுக்குத் தயாராகும் ‘கொடி’

Read Next

பயம் ஒரு பயணம் – பயணிக்க ரெடியா ?

Most Popular