தனுஷ் முதன் முறையாக இரு வேடங்களில் நடிக்கும் ‘கொடி’ படம் வரும் தீபாவளிக்குத் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“எதிர் நீச்சல், காக்கி சட்டை” படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்.எ. சந்திரசேகரன் மற்றும் பலர் நடிக்கும் படம் இது.
படத்தை ஆரம்பித்து குறுகிய நாட்களிலேயே படத்தை எடுத்து முடித்துவிட்டனர். தனுஷின் ‘தொடரி’ படம் அடுத்த மாதம் வெளிவருவதை முன்னிட்டு ‘கொடி’ படத்தை தீபாவளி வெளியீடாக அறிவித்துள்ளனர்.
தனுஷ், த்ரிஷா முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்தப் படம் அரசியல் கலந்த ஒரு ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
இதுவரை வெளிவந்துள்ள தனுஷ் படங்களிலேயே இந்தப் படத்தை மிகப் பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் சார்பாக மதன் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.