பயம் ஒரு பயணம் – பயணிக்க ரெடியா ?

ஆக்டோ ஸ்பைடர் தயாரிப்பில் மணிசர்மா இயக்கத்தில் பரத் ரெட்டி, விசாகா சிங், மீனாட்சி தீட்சித் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பயம் ஒரு பயணம்’.

இந்தப் படமும் ஒரு திகில் படம்தான். அதே சமயம், பயத்தை படம் பார்க்கும் போதே உணர வைக்கும் விதமான பரபரப்பும், விறுவிறுப்பும் இந்தப் படத்தில் இருக்கும் என்கிறார்கள்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கம் போல டிரைலரையோ, பாடல்களையோ போட்டுக் காட்டாமல் ஒரு 20 நிமிடக் காட்சியைத் திரையிட்டு வித்தியாசப்படுத்தினார்கள்.

அதற்கேற்றபடி அந்த 20 நிமிடமுமே பயத்தில்தான் போனது. அந்த அளவிற்கு படம் மீது படக்குழுவினர் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

நிகழ்வில் கலந்து கொள்ள வந்த விஐபிக்களும் படத்தின் சிறு பகுதியைப் பார்த்து பாராட்டியது படத்திற்கு பிளஸ்.

வரும் 25ம் தேதி ‘பயம் ஒரு பயணம்’ உலகம் முழுவதும் வெளியாகிறது.

Read Previous

‘தர்மதுரை’ – அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு

Read Next

Kodi grand release for Diwali