மருமகன் தனுஷ் தயாரிப்பில், ‘கபாலி’ படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க உள்ளார்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் நேற்று அறிவித்துள்ளார்.
தனுஷின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான உண்டர்பார் பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்தப் படம் ஆரம்பமாக உள்ளது.
இது ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகமாக இல்லாமல், புதிய கதை கொண்ட படமாக இருக்கும் என்று தெரிகிறது.
ரஜினிகாந்தை வைத்து தனுஷ் புதிய படம் ஒன்றைத் தயாரிக்க உள்ளதால் அவருக்கு திரையுலகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.