விஜய் சேதுபதியின் புதிய படம் 4ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பம்

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு 4 ஆம் தேதி துவங்குகிறது.

“பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – ‘எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு’, ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி’, கமலஹாசன் நடித்த ‘நம்மவர்‘ மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் புதிய படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார்.

பி.பாரதி ரெட்டி தயாரிப்பில் உருவாக உள்ள 6 வது படம் இது. ‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்சந்தர், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் மூலம் விஜய் சேதுபதி, இயக்குனர் விஜய்சந்தர் முதன் முறையாக இணைகிறார்கள்.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷிகண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேருகிறார்கள். ‘சுந்தரபாண்டியன் , ரம்மி’ ஆகிய படங்களுக்கு பிறகு சூரி மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார். மேலும், நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷன் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.

ஒளிப்பதிவு R . வேல்ராஜ் , கலை இயக்கம் M .பிரபாகரன், சண்டைப் பயிற்சி அனல் அரசு, படத்தொகுப்பு பிரவீன் K .L மேற்கொள்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.

Read Previous

பூமராங் – டிரைலர் 2

Read Next

தாதா 87 – விமர்சனம்