தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்புவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதுமே ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.
அதற்குக் காரணம் அவருடைய காதல்தான். பல வருடங்களுக்கு முன்பே சிம்புவும், நயன்தாராவும் நெருங்கிய காதலர்களாக இருந்தார்கள்.
அதன்பின் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் நயன்தாரா, சிம்புவை விட்டுப் பிரிந்தார். அதற்கடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவேயில்லை.
பின்னர், யாரும் எதிர்பார்க்காத நிலையில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்து ஆச்சரியப்படுத்தினார்.
நயன்தாராவிற்கு அடுத்து சிம்புவை காதலித்த நடிகையாக ஹன்சிகா இருந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூட அறிவித்தார்கள். அதன்பின் திடீரென இருவரும் பிரிந்தார்கள். அதற்கடுத்து இருவரும் ஜோடியாக நடிக்கவேயில்லை.
இப்போது நயன்தாராவைப் போலவே ஹன்சிகா மீண்டும் சிம்புவுடன் நடிக்க உள்ளார்.
ஹன்சிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மஹா’ படத்தில் சிம்புவும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கப் போகிறார். இதை ஹன்சிகாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிம்புவைக் காதலித்து, அவரைப் பிரிந்து, மீண்டும் அவருடன் சேர்ந்து நடித்த நயன்தாராவைப் போலவே இப்போது ஹன்சிகவும் அதே போல் நடிக்க உள்ளார்.