சசி இயக்கத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’

தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், “வேதாளம், அரண்மனை, மாயா, பாகுபலி 1, சென்னை 28 II, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன்” உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவர் ரமேஷ் P பிள்ளை.

தற்போது அவரது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்து வருகிறார்.

“சொல்லாமலே துவங்கி பிச்சைக்காரன்” வரை உணர்வுகளை மையப்படுத்தி அதை ஜனரஞ்சகமான முறையில் வெளிப்படுத்தும் சசி இயக்கத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தை முதல் படமாகத் தயாரிக்கிறார்.

அக்கா, தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்து தரப்பினருக்கும் தங்களின் நிஜ வாழ்க்கையை உணரும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் சசி.

அக்காவாக மலையாளத் திரையுலகின் முன்னனி நடிகையா லிஜோ மோள் நடிக்கிறார். இப்படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார். அவரின் ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.

முதன் முறையாக டிராபிக் இன்ஸ்பெக்டராக சித்தார்த் நடிக்க, இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக துடிப்பான வேடத்தில் பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் அறிமுக நடிகை காஷ்மீரா, மதுசூதனன், நக்கலைட்ஸ் யூடியுப் குழுவின் நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தயாரிப்பு – ரமேஷ் P பிள்ளை (அபிஷேக் பிலிம்ஸ்)
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சசி
ஒளிப்பதிவு – பிரசன்னா S குமார்
இசை – சித்து குமார் (அறிமுகம்)
படத்தொகுப்பு – ஷான் லோகேஷ்
கலை – மூர்த்தி
பாடல்கள் – மோகன் ராஜன்,தமயந்தி
சண்டைப்பயிற்சி – சக்தி சரவணன்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

Read Previous

தமிழ் சினிமா – மார்ச் 8, 2019 வெளியாகும் படங்கள்…

Read Next

Kuppathu Raja – Theatrical Trailer