‘வீர சிவாஜி’ – டிசம்பர் 16 வெளியீடு

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரித்துள்ள படம் ‘வீர சிவாஜி’.

கணேஷ் விநாயக் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். விக்ரம் பிரபு, ஷாமிலி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலி, தமிழில் நாயகியாக நடிக்கும் முதல் படம் இது.

அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள இந்தப் படத்தை டிசம்பர் 16ம் தேதியன்று வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

Read Previous

சூதாட்டத்தில் சிக்கிய சினிமா – இயக்குனர் கஸ்தூரிராஜா

Read Next

Parandhu Sella Vaa – Mann Meedhu – HD Lyric Video