இளைஞர்கள் மனதில் இடம் பிடித்த ஏ.ஆர்.ரகுமான்

‘ஜல்லிக்கட்டு’ நடக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று மாணவர்களும், இளைஞர்களும் தமிழ்நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இதுவும் ஏதோ ஒரு போராட்டம் என்று நினைத்தவர்கள் கூட இன்று போராட்டக்காரர்களின் வலிமையயைப் பார்த்து மிரண்டு போயுள்ளார்கள்.

நாளை தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு, மறியல் போராட்டம், ஸ்டிரைக் என பல்வேறு பிரிவினரும் அறிவித்து வருகிறார்கள்.

திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் இன்று போராட்டம் நடத்தினார்கள். நாளை நடிகர் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற இருக்கிறது. ஆனால், இதற்கு போராட்டக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாளை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

“I’m fasting tomorrow to support the spirit of Tamilnadu !” என சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டதுமே பலர் அவரை வாழ்த்தி வருகிறார்கள். இதன் மூலம் தமிழர்களின் போராட்டம் உலகம் முழுவதும் இன்னும் அதிகமாக எடுத்துச் செல்லப்படும்.

ரகுமான் டிவிட்டரில் பதிவிட்ட இந்த இரண்டு மணி நேரத்திற்குள் 15 ஆயிரம் பேர் லைக் செய்தும், 7 ஆயிரம் பேர் ரிடிவீட் செய்தும் அவரது பதிவைப் பகிர்ந்து வருகிறார்கள்.

இளைஞர்களின் போராட்டத்திற்கு உணர்விற்கு ஏ.ஆர்.ரகுமான் மதிப்பளித்துள்ளது அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகமாக்கியுள்ளது.

Read Previous

Sai Pallavi in Charlie remake

Read Next

பீட்டா தந்த சிறப்பு, பெரும் அவமானம் – தனுஷ்