தமிழ்த் திரையுலகத்தில் பெரிய நடிகர்கள் எனக் கருதப்படும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் நடித்த படங்களின் டீசர், டிரைலர், முதல் பார்வை ஆகியவை வெளிவந்தாலே அவர்களுடைய ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
கடந்த சில வருடங்களாக யார் நடித்த படங்களின் டீசர் யு டியூபில் சாதனை புரிகிறது என்பது மேலே சொன்ன ரசிகர்களுக்கிடையில் கடும் போட்டியாக நிலவி வருகிறது.
‘கோச்சடையான்’ படத்தின் டீசரிலிருந்து யு டியூப் ஹிட்ஸ் என்பது நடிகர்களின் இமேஜ் சம்பந்தப்பட்ட விஷயமாக மாறியது.
அதற்கடுத்து வரும் பெரிய நடிகர்களின் படங்களின் டீசர், டிரைலர் ஒவ்வொன்றும் என்ன சாதனை படைக்கிறது என்பதை அவர்களின் ரசிகர்கள் விவாதம் செய்யும் அளவிற்கு அலசி வருகிறார்கள்.
அஜித் நடித்து வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் வெளிவந்த போது இந்தப் பார்வைகள், லைக்குகள் ஆகியவை பேசப்படும் விஷயமாக மாறின.
அதற்கடுத்து அஜித் வெளிவந்த ‘வேதாளம்’ படம் 24 மணி நேரத்திற்குள்ளாக அதிக பார்வைகள், லைக்குகள் பெற்று ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியது.
அந்த சாதனையை விஜய் நடித்து வெளிவந்த ‘தெறி’ படத்தின் டீசர் முறியடித்தது. ‘தெறி’ டீசரின் சாதனையை ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘கபாலி’ பட டீசர் முறியடித்தது.
‘வேதாளம்’ டீசர் நவம்பர் 2014ம் ஆண்டு வெளிவந்தது. அதற்குப் பிறகு அஜித் நடித்து வரும் ஒரு படத்தின் டீசர் ஒன்றரை ஆண்டுகள் ஆகியது. அதனால், தங்களின் சாதனைக்காக அ4த் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
நேற்று 11ம் தேதியில் கடிகரா முள் 12.00ஐத் தாண்டியதும் ‘விவேகம்‘ டீசர் வெளியானது. அவ்வளவுதான், அடுத்த ஐந்து நிமிடம், அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என அஜித் ரசிகர்கள் யு டியூபே மிரளும் அளவிற்கு டீசரைத் திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்ந்தனர்.
குறைந்த நேரத்தில் அதிகப் பார்வைகள், அதிக லைக்குகள் ஆகிய சாதனைகளைப் படத்த இந்த டீசர் 24 மணி நேரத்திற்குள்ளாக 61 லட்சம் பார்வைகள் மற்றும் 2 லட்சத்து 85 ஆயிரம் லைக்குகளைப் பெற்று தென்னிந்திய அளவில் புதிய சாதனையைப் படைத்தது.
அடுத்து 37 மணி நேரத்திற்குள்ளாக 3 லட்சம் லைக்குகள் மற்றும் 70 மில்லியன் பார்வைகளைப் பெற்று மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது.
‘பாகுபலி 2’ படத்தின் டீசருடன் ‘விவேகம்’ டீசரை ஒப்பிடவே கூடாது. ‘பாகுபலி 2’ படத்தின் பட்ஜெட், முதல் பாகத்தினால் இரண்டாவது பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பு என பல காரணங்கள்.
ஆனால், ‘விவேகம்’ டீசரின் இவ்வளவு பெரிய சாதனைக்கு ஒரே காரணம், அது அஜித் மட்டுமே.