விரைவில் ‘விதி மதி உல்ட்டா’ இசை வெளியீடு

ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிட், நிறுவனத்தின் மூலம் ‘டார்லிங் 2’ படத்தைத் தயாரித்து, கதாநாயகனாகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா.

இப்போது ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் விஜயபாலாஜியின் இயக்கத்தில் ‘விதி மதி உல்ட்டா’ படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்து வருகிறார்.

தன்னுடைய முதல் படமான ‘டார்லிங் 2’ படத்தில் சதீஷ் சந்திரசேகரன் என்ற இயக்குனரை அறிமுகப்படுத்தியது போல, இந்தப் படத்திலும் விஜயபாலாஜியை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்.

ஜனனி ஐயர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம், ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். கானாபாலா, சித்ஸ்ரீராம், சின்மயி ஆகயோரும் பாடியிருக்கிறார்கள்.

கொடூரமான தாதாவிடம் சிக்கிக் கொள்ளும் தனது குடும்பத்தையும், காதலியையும், ஒரு நடுத்தரக் குடும்பத்து இளைஞன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் இப்படத்தின் கதை.
இதை காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜுலை மாதம் நடைபெற உள்ளது.

Read Previous

Yendha Nerathilum – Isaac Newton – Video Song

Read Next

Kalakka Povadhu Yaru Season 6 Grand Finale Telecast on 11th June

Most Popular