300க்கும் அதிகமான தியேட்டர்களில் ‘சத்ரியன்’ நாளை வெளியீடு

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள ‘சத்ரியன்’ படம் நாளை தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.

பல தரமான வெற்றிப் படங்களைக் கொடுத்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

திருச்சியைப் பின்னணியாகக் கொண்ட அதிரடியான ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள ‘சத்ரியன்’ படத்திற்கு வினியோகஸ்தர்களிடமும், தியேட்டர்காரர்களிடமும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாளை அதிகமான படங்கள் வெளியாகதததாலும், ‘பாகுபலி 2’ படத்தின் ஓட்டம் முடிந்துவிட்டதாலும் ‘சத்ரியன்’ படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்று வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Previous

ராஜராஜ சோழன் – தமிழில் முதல் சினிமாஸ்கோப் படம்

Read Next

வெற்றிக்காகக் காத்திருக்கும் விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக்