நேற்று ‘இளைய தளபதி’, இன்று ‘தளபதி’, நாளை…?

தமிழ் சினிமாவில் ஹீரோக்களையும், பட்டங்களையும் பிரிக்க முடியாது என்பது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

புரட்சித் தலைவர், நடிகர் திலகம், காதல் மன்னன், சூப்பர் ஸ்டார், உலக நாயகன், நவரச திலகம், புரட்சித் திலகம், புரட்சித் தமிழன், இளைய திலகம், காதல் இளவரசன், நவரச நாயகன், புரட்சித் தளபதி, இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், சின்ன தளபதி என தங்களது அபிமான நடிகர்களுக்கு பட்டங்களைச் சூட்டி அழகு பார்த்தது தமிழ் ரசிகர் கூட்டம்.

சில பட்டங்களால் ரசிகர்களால் சூட்டப்பட்டது, சில பட்டங்கள் நடிகர்களாலேயே சூட்டிக் கொள்ளப்பட்டது.

இன்றைய தமிழ்த் திரையுலகின் வசூல் நாயகர்களில் முக்கியமானவராக இருக்கும் விஜய், ‘இளைய தளபதி’ என்ற பட்டத்துடன்தான் இத்தனைக் காலமும் குறிப்பிடப்பட்டு வந்தார்.

இன்று வெளியான ‘மெர்சல்’ படத்தின் முதல் பார்வையில் விஜய்யின் ‘இளைய தளபதி’ பட்டம் பதவி உயர்வு பெற்று ‘தளபதி’ யாக மாற்றப்பட்டுள்ளது.

நேற்று, ‘இளைய தளபதி’, இன்று ‘தளபதி’, நாளை….அந்தப் பட்டம் என்னவாக மாறும் என்பது விஜய்க்கு மட்டுமே தெரியும்.

அரசியலில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மட்டுமே நீண்ட நாட்களாக ‘தளபதி’ என கட்சித் தொண்டர்களால் அழைக்கப்பட்டு வந்தார்.

இப்போது விஜய்யும் தன் பெயருடன் ‘தளபதி’ என போட்டுக் கொண்டுள்ளது என்ன சர்ச்சையை ஏற்படுத்தும் என்பது இனிதான் தெரிய வரும்.

Read Previous

‘சுல்தான்’ முதல் பார்வை காப்பியா ‘மெர்சல்’ முதல் பார்வை ?

Read Next

Vikram Vedha Tamil Movie Official Trailer