நடிகை நமீதாவுக்கும், நடிகர் வீரா-வுக்கும் வரும் 24ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற உள்ளது.
இது பற்றி நடிகை நமீதா விடுத்துள்ள அறிக்கையில்,
“என்னைப் பற்றியும், வீராவைப் பற்றியும் இப்போது கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்களது திருமணம் 24ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளது. வீரா என்னுடைய நெருங்கிய நண்பர், மனம் கவர்ந்தவர். அவர் ஒரு தயாரிப்பாளர், ஆர்வமுள்ள நடிகர்.
இது காதல் மற்றும் பார்த்து வைக்கப்பட்ட திருமணம். கடந்த வருடம் எங்களது நண்பர் ஒருவரால் எனக்கு அறிமுகமானவர் வீரா, பின் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல நண்பர்களானோம். கடந்த செப்டம்பர் மாதம் அவர் பீச்சில் கேன்டில் லைட் டின்னர் ஒன்றில் என்னைக் காதலிப்பதாகச் சொன்னார். அதைக் கேட்டதும் எனக்கு புல்லரித்துவிட்டது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் ஆன்மீகத்திலும், வாழ்க்கை லட்சியத்திலும் ஒரே எண்ணம் உடையவர்கள் என்பதால் நான் சரி என சம்மதம் சொன்னேன்.
நாங்கள் பயணம் செய்பது, குறிப்பாக டிரெக்கிங் போவது, இயற்கையை நேசிப்பது என எங்கள் காதலைப் பகிர்ந்து கொண்டோம்.
எனக்கு முன்னுரிமை தரக் கூடியவர் எனக்குக் கிடைத்திருப்பதை நான் ஆசிபெற்றவளாக நினைக்கிறேன். கடந்த மூன்று மாதங்களாக அவரைப் பற்றி நான் நிறையவே புரிந்து கொண்டேன். அவரைப் போன்ற ஒருவர் என்னுடன் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம்தான்.
அவருடைய கனிவும், ஆதரவும் ஆண்கள் மீதான என்னுடைய நம்பிக்கையை மீண்டும் கொண்டு வந்துள்ளது.
எனக்கு முதல் நாளிலிருந்தே அன்பையும் ஆதரவையும் கொடுத்து வரும் உங்கள் அன்பும், ஆதரவும் எங்களுக்கு வேண்டும்,” என நமீதா கூறியுள்ளார்.