சீயோன் இயக்கத்தில் கருணாகரன், சந்தோஷ், ஆதித் அருண், யோக் ஜாப்பி, அனு சித்தாரா, சுபிக்ஷா, லிஸா, இமான் அண்ணாச்சி, வழக்கு எண் முத்துராம், சுப்ரமணியபுரம் ராஐா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பொது நலன் கருதி‘.
பணத்தை வைத்து பெரும் பின்புலத்துடன் பணம் சோ்த்துக் கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்திடம், தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஒப்படைத்துவிட்டு, அவர்களிடமிருந்து அன்பையும் நம்பிக்கையையும் எதிர்பார்த்து காத்திருக்கும் எளிய மனிதர்களை பற்றிய கதையே ‘பொது நலன் கருதி’ என்கிறார் இயக்குனர் சீயோன்.
” இங்கே பொதுநலன் என்ற பெயரை குறியீடாய் வைத்து நடந்து கொண்டிருக்கும் அத்தனை செயல்களுக்கும் அதிகாரவர்க்கத்தின் சுயநலம்தான் காரணம். காலம் காலமாக ஒரு நம்பிக்கையை மக்களிடம் திணிப்பது, பின்பு அதை உண்மை என நம்ப வைப்பதற்காக அவர்களையும், அவர்களின் நிறுவனத்தையும் பொது சந்தையில் விளம்பரப்படுத்தி, பிரம்மாண்டாமாய் பிரபலப்படுத்திக் கொள்கிறார்கள். அதன் பின்பு அவர்களை எளிய மனிதர்கள் தங்களின் கோபத்தால் எதுவுமே செய்ய முடியாதபடி கட்டமைத்துக் கொண்டு செல்வாக்குள்ள மனிதர்களாய் தங்களை உருவாக்கிகொள்கிறார்கள். இவற்றை திரைக்கதையின் மூலமாக எவ்விதமான சமரசத்திற்கும் இடமளிக்காது மக்களுக்கு உண்மையை காட்சிப்படுத்துவதே இத் திரைப்படத்தின் முக்கிய நோக்கமாகும்,’’ என்கிறார் இயக்குனர் சீயோன்.