நயன்தாராவின் 75வது படம் ‘அன்னபூரணி’

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் 75வது படத்தின் தலைப்பு ‘அன்னபூரணி’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் தலைப்பு அறிவிப்பை ஒரு டீசராகவே வெளியிட்டுள்ளார்கள். இந்த டீசர் இப்போதே சர்ச்சையை ஏற்படுத்தப் போகிறதா அல்லது வெளியாகும் போது ஏற்படுத்துமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

பிராமண வீடு, பூஜை செய்யும் அப்பா, பாட்டி, அம்மா ஒரு பக்கம் இருக்க, உள்ளே கட்டில் மேல் அமர்ந்து ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. ஆனால், உள்ளே  ‘நான் வெஜ்’ பற்றி மறைத்துக் கொண்டு படிக்கிறார்.

‘அன்னபூரணி’ என்ற பெயர் அழகாக இருக்கிறது, ஆனால், டீசரிலேயே அனல் தெறிக்க விட்டுள்ளார்களே…

நிலேஷ் கிருஷ்ணா இயக்க, தமன் இசையமைக்க, நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சச்சு, ரேணுகா, கார்த்திக்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

ஜீ ஸ்டுடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ், நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

Read Previous

துருவ நட்சத்திரம் – டிரைலர்

Read Next

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி