மாஸ்டர் – ரிலீஸ் எப்போது ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.

இப்படம் ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாக வேண்டியது. கொரானோ ஊரடங்கு காரணமாக வெளியாகவில்லை. அடுத்து படம் எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படம் 2021 பொங்கலுக்கு வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடு எப்போது இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

ஊரடங்கு முடிந்தபின் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டர்களுக்கு வர ஒரு சில வாரங்களோ, மாதங்களோ ஆகலாம் என்ற சூழ்நிலைதான் உள்ளது. எப்படியும் இன்னும் நான்கைந்து மாதங்களாவது ஆகலாம் என்றுதான் சொல்கிறார்கள்.

அப்படிப் பார்த்தால் அக்டோபர் மாதம் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆயுத புஜை, 26ம் தேதி திங்கள் கிழமை விஜயதசமி பண்டிகைகள் வருகிறது.  நவம்பர் 14ம் தேதி சனிக்கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது. இந்த இரண்டு பண்டிகை வாரங்களில் ஏதாவது ஒரு வாரத்தில் வெளியிடலாம். இவற்றை விட்டால் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்கள். இறுதி முடிவு தயாரிப்

அடுத்த ஐந்து மாதங்களுக்குள் எப்படியும் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது. அதற்குள் கொரானோ இந்த உலகத்தை விட்டு ஓடினால் நல்லது.

Read Previous

‘அண்ணாத்த’ – பொங்கல் ரிலீஸ் என அறிவிப்பு

Read Next

நடிகை சமீரா ரெட்டி குழந்தையின் ரஜினி ஸ்டைல்