XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.
இப்படத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஒரு குட்டி கதை’ என்ற பாடலை விஜய் அவருடைய சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் நாளை பிப்ரவரி 14ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
இதற்கு முன்பு ‘கத்தி’ படத்தில் அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ என்ற சூப்பர் ஹிட் பாடலை விஜய் பாடியிருந்தார். அதன்பிறகு அவரது இசையில் விஜய் பாடும் பாடல் இது.
‘மாஸ்டர்’ படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.