கேஜிஎப் 2 – ஜுலை 16 ரிலீஸ்

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில், பிரஷாந்த் நீல் இயக்கத்தில், யாஷ், சஞ்சய் தத், ரவீனா டான்டன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கேஜிஎப் சேப்டர் 2’.

இப்படம் ஜுலை 16ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

2018ம் ஆண்டு வெளிவந்த ‘கேஜிஎப்’ படத்தின் இரண்டாவது பாகம்தான் ‘கேஜிஎப் 2’.

முதல் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு, வெற்றி, வசூலை விட இந்த இரண்டாவது பாகத்திற்கு அதிகம் கிடைக்கும் என இந்தியத் திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

மூன்று வாரங்களுக்கு முன்பு வெளிவந்த இப்படத்தின் டீசர் 16 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை புரிந்ததே அந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம்.

Read Previous

ஏலே – மக்களிடம் ஐஸ் விற்ற சமுத்திரக்கனி

Read Next

நானும் சிங்கிள்தான் – டிரைலர்

Most Popular