அப்புண்டு ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் ஆனந்தி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘கமலி from நடுக்காவேரி’.
புது முகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஶ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று, நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் மற்றொரு புறமும் என, இரு வேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் 'கமலி from நடுக்காவேரி'.
ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை. ஒரு புதுமுக இயக்குநர் மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்த படம். கவிதையாக ஒரு காதல்..
தரமான ஒளிப்பதிவு, தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறாராம் இயக்குநர் ராஜசேகர்.
ஆனந்தியின் நடிப்பு படம் வந்த பிறகு எல்லோராலும் பாராட்டப்படும். பின்னணி இசையும் பாடல்களும் திரைக்கதைக்கு உதவும் விதத்தில் அழகாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் என்கிறார்கள் படக்குழுவினர்..
இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததும், கதையைக் கேள்விப்பட்ட உலக உரிமையை மாஸ்டர் பீஸ் என்கிற கம்பெனி வாங்கிவிட்டது.