காளிதாஸ் – பரபரக்க வைக்கும் சைபர் க்ரைம் த்ரில்லர்

லீப்பிங் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட், இன்க்ரடிபிள் புரொடக்ஷன்ஸ், தினா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், உருவாகியுள்ள படம் ‘காளிதாஸ்’.

போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பரத் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு இந்தப் படம் ஒரு ‘கம் பேக்’ படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு படக்குழுவினருக்கு இருக்கிறது.

ஆன் ஷீத்தல் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.

நாட்டில் தற்போது பல வகையான குற்றங்கள் நடந்து வருகின்றன. மொபைல் போன்கள் வந்த பிறகு சில குற்றங்களிலும் மாற்றம் வந்திருக்கிறது.

குடும்ப உறவுகளுக்குள்ளும் பிரச்சினைகள் வந்துவிட்டன. ஒரே வீட்டில் இருந்தாலும் மொபைல் போனை எடுத்துக் கொண்டு தனித் தனியாக உட்கார்ந்து விடுகின்றனர்.

அவற்றிலிருந்து சில விஷயங்களை எடுத்துக் கொண்டு, சமீபத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களைச் சேர்த்து, அடுக்கடுக்கான கொலைகள், அவற்றை செய்தது யார் என்பதுதான் இந்தப் படத்தின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்..

‘நாளைய இயக்குனர்கள்’ சீசன் 3ல் ரன்னர் ஆக வந்தவர்தான் இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீ செந்தில்.

சமீபத்தில் வெளிவந்த த்ரில்லர் படங்களான ‘தடம், ராட்சசன், ஜீவி’ ஆகிய படங்களைப் போல இந்தப் படமும் பரபப்பான படமாக அமையும் என படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்.

படத்தைப் பார்க்கும் போது நம் குடும்பத்துக்குள்ளேயே நம் குடும்ப உறவுகளை எப்படி ‘மிஸ்’ செய்கிறோம் என்ற உணர்வு படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வரும் என்கிறார்கள்.

படத்தின் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியாது என்கிறார்கள்.

டிசம்பர் 13ம் தேதி உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது.

காளிதாஸ் – புகைப்படங்கள்…

Read Previous

த்ரிஷா நடிக்கும் ராங்கி – டீசர் – 4 Tamil Cinema

Read Next

மாஃபியா – டீசர் 2

Most Popular