பாகுபலி’ படத்தைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி தயாரிப்பில் உருவாகும் ‘ஜான் டோ’ (John Doe) திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, மதுமிதா இயக்குகிறார்.
மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் இணைந்து கதை, திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குநர் மதுமிதா கூறுகையில், “ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா, கொலைகாரனா, காணாமல் போன குழந்தையா அல்லது இதுவரை அடையாளம் கண்டறியப்படாத ஒருவரா என்ற கேள்விகளைச் சுற்றி இப்படத்தின் கதை அமைந்துள்ளது. சந்துரு என்ற கதாபாத்திரம் தனக்குள் எழும் கேள்விகளுக்கான பதில்களைத் தேடிப் பயணிக்கும்போது, யாரும் எதிர்கொள்ளத் தயாராக இல்லாத ஓர் உண்மையைச் சந்திக்கிறது. பார்வையாளர்கள் எளிதில் கணிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
ப்ரீத்தா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்ய, முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். கூடுதல் இசையை ஆர்டிஸ்ட் 404 இசைக்குழு அமைத்துள்ளது. விஜய் வெங்கடரமணன் படத்தொகுப்புப் பணிகளையும், அஷ்வினி காலே தயாரிப்பு வடிவமைப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.