’ஜவான் 2’ உருவாகுமா? – அட்லி பதில்

’ஜவான்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு அட்லி பதிலளித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜவான்’. 2023-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் உலகளவில் வசூல் சாதனை புரிந்தது. சுமார் 1000 கோடி மேல் வசூல் புரிந்தது. இந்தப் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான இயக்குநர்கள் பட்டியலில் அட்லி இணைந்துள்ளார்.

அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை இயக்கவுள்ளார் அட்லி. இது தகவலாக இருந்தாலும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனிடையே மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார் அட்லி. அப்போது அவரிடம் ‘ஜவான் 2’ உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அட்லி, “உறுதியாக தெரியவில்லை. ஏதாவது ஒன்றை எழுதி ஆச்சரியப்படுத்துவதே எண்ணம். எனது ஒவ்வொரு படமுமே 2-ம் பாகம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆனால், எப்போதுமே பார்வையாளர்களை வித்தியாசமான கதையம்சங்களுடன் ஆச்சரியப்படுத்துவதே எண்ணம்” என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஷாரூக்கான் படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு “நிச்சயமாக. மீண்டும் ஷாரூக் சாருடன் இணைந்து பணிபுரிவேன். ஆனால் எப்போது என்பதை ஷாரூக் சார் தான் சொல்ல வேண்டும்” என்று பதிலளித்துள்ளார் அட்லி.

Read Previous

ரெபல் – விமர்சனம்

Read Next

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சூர்யா விலகியது ஏன்? – கெளதம் மேனன் விளக்கம்

Most Popular