ஹரி, அருண் விஜய் படம் ஆரம்பம்

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, புகழ், ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படம் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது.

வரும் 16ம் தேதி முதல் பழனியில் படப்டிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து ராமேஸ்வரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, காரைக்குடி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

இயக்குனர் ஹரியின் 16வது படமாகவும், அருண் விஜய்யின் 33வது படமாகவும் இப்படம் உருவாகிறது.

‘சேவல்’ படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் ஹரி இயக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ்.

சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். 

Read Previous

தமிழில் ரீமேக் ஆகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’

Read Next

ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்

Most Popular