சிறந்த ஆடை அணிந்ததற்காக ராம் சரணுக்கு குவியும் பாராட்டு

சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் நவீன பாணியிலான உடைகளை அணிந்து சிறப்பாக தோன்றும் நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு, அவர்களை பாராட்டும் மரபும் ஹாலிவுட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பில் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடையுடன் தோன்றிய நட்சத்திரங்களின் பட்டியலில் நடிகர் ராம் சரண் இடம் பிடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு பலர் சமூக ஊடகங்களில் மூலமாகவும், நேரிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அண்மையில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் எனும் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் நட்சத்திர நடிகர்களும், நடிகைகளும், கலைஞர்களும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகரான ராம்சரண், அவர் அணிந்திருந்த தனித்துவமான வடிவமைப்புடன் கூடிய ஆடைக்காக, 'சிறந்த ஆடை அணிந்து விழாக்களில் கலந்து கொள்ளும் நட்சத்திர நடிகர்'களின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் இந்திய நடிகர் இவர் தான்.

Read Previous

மூன்றாவது முறையாக இணையும் ராம்குமார் – விஷ்ணு விஷால் கூட்டணி

Read Next

பாலியல் குற்றங்களைப் பற்றிப் பேசும் “மெய்ப்பட செய்”

Most Popular