‘டிக்கிலோனா’ முதல் பார்வை வெளியீடு

கொரானோ ஊரடங்கு 60 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் முதல் பார்வை ரிலீஸ், டீசர், டிரைலர், ஆடியோ ரிலீஸ் என அனைத்துமே மறந்து போய்விடும் போலிருக்கிறது.

‘க பெ ரணசிங்கம்‘ டீசர், ‘கா’ டீசர், ‘பொன்மகள் வந்தாள்’ டிரைலர் ஆகியவை இடையில் வந்ததால்தான், இப்படி ஏதோ ஒரு சில விஷயங்கள் இருக்கின்றன என்ற ஞாபகம் வருகிறது.

அந்த வரிசையில் இன்று சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்கள்.

கார்த்திக் யோகி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். 

படத்தின் கதாநாயகியாக அனகா நடிக்கிறார். யோகி பாபு, ஷிரின் கான்ச்வாலா, ஆனந்தராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மூன்று முதல் பார்வைகளை அடுத்தடுத்து வெளியிட உள்ளார்கள், அதில் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது

Read Previous

விஜய், வித்யாசாகர் இணைந்த படங்கள்

Read Next

சூப்பர் டீலக்ஸ் – Original Sound Track