தர்பார் – ரஜினியின் இளமை ரகசியம்

‘தர்பார்’ படம் ரஜினிகாந்தின் 167வது படம். அவர் சினிமாவில் நடிக்க வந்து 45 வருடங்கள் ஆகப் போகிறது. ஆனால், இன்னமும் அதே எனர்ஜியுடன், துள்ளலுடன் இருக்கிறார்.

‘கபாலி, காலா’ ஆகிய படங்களில் நரைத்த முடியுடன் வயதான கதாபாத்திரத்தில் நடித்த ரஜினிகாந்த்தை அவரது ரசிகர்களே அதிகம் ரசிக்கவில்லை. ஆனால், கடந்த வருடம் வெளிவந்த ‘பேட்ட’ படத்தில் பழைய ரஜினியைப் பார்த்ததற்கே அந்தப் படத்தில் கதை பெரிதாக இல்லை என்றாலும் ரசிகர்கள் ஓட வைத்தனர்.

இப்போது ‘தர்பார்’ படத்தில் மீண்டும் ‘வின்டேஜ்’ தோற்றத்திற்கு ரஜினி திரும்பி இருப்பது அவரது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக உள்ளது.

தற்போது வயதான நடிகர்களை இளமையாகக் காட்டுவதற்கும், குண்டான நடிகைகளை ஒல்லியாகக் காட்டுவதற்கும் பல டெக்னாலஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், ‘தர்பார்’ படத்தில் அப்படியெல்லாம் தேவையில்லாமல் வீண் செலவு செய்யவில்லையாம்.

ரஜினிகாந்த் அவருடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உணவு முறை, உடற்பயிற்சி என சில விஷயங்களைச் செய்து தன்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டாராம்.

மேலும், அவருக்கென பிரத்யேகமான மேக்கப், ஸ்மார்ட்டான உடைகள் ஆகியவற்றை வைத்து அவரை ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் காட்டியிருக்கிறாராம் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்.

‘தர்பார்’ படத்தைப் பார்க்க இன்னும் ஒரே ஒரு நாள்தான் உள்ளது.

 

Read Previous

ஏஆர் ரகுமான் முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’

Read Next

சைக்கோ – டிரைலர்

Most Popular