விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’.

ஸ்டார் ஸ்டுடியோ 18 மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை, ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படம் மூலம் விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது.

“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மற்றும் “சீதக்காதி” திரைப்படங்கள் ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்புத் திறனையும், தனித்துவமான கதை சொல்லல் பாணியையும் கொண்ட பாலாஜி தரணிதரனின் இயக்கமும் இணைவதால், ‘பத்தா’ வித்தியாசமான திரைப்பட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் அட்லி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி ஏற்கனவே ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது ‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். ‘ஜவான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த நிலையில், தற்போது அட்லி வழங்கும் தமிழ் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இருவரின் முந்தைய கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்த புதிய கூட்டணி எப்படி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

‘ஜெய் பீம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படத்திற்கு இளைஞர்களின் மனதை கவர்ந்த இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை செல்வகுமார் SK மேற்கொள்ள, படத்தொகுப்பை ஆர். கலைவாணன் கவனித்துள்ளார். படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக டி. முத்துராஜ் பணியாற்றுகிறார். இப்படத்தின் இணை தயாரிப்பாளராக அஷ்வின் முருகன் பணியாற்றுகிறார்.

முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து ‘பத்தா’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

Read Previous

பியார் பிரேமா கல்யாணம் – டிரைலர் வெளியிடு

Read Next

மகுடம் – டிரைலர்