ஆர்யா நடிக்கும் ‘கேப்டன்’ முதல் பார்வை வெளியீடு

‘டெடி’ படத்திற்குப் பிறகு ஆர்யா, இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் அடுத்து இணைந்துள்ள படம் ‘கேப்டன்’.

தின்க் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்யாவின் தி ஷோ பியூப்புள் பட நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இன்று படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இந்த முதல் பார்வையை படக்குழு ஒன்றரை ஆண்டு காலமாக உருவாக்கியதாம். 

சிம்ரன், ஐஸ்வர்ய லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இமான் இசையமைக்க, கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார். 

ஆர்யா நடித்து இதற்கு முன்பு வெளிவந்த ‘டெடி, சார்பட்டா பரம்பரை’ படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்த ‘கேப்டன்’ படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Read Previous

‘இயல்வது கரவேல்’ படத்தில் எதிரிகளாகும் நெருங்கிய நண்பர்கள்

Read Next

ஜீ 5 – பிரகாஷ்ராஜ் நடிக்கும் ‘அனந்தம்’ இணைய தொடர்

Most Popular