அனுபவ் சின்ஹா இயக்கத்தில், ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் மற்றும் பலர் நடித்து 2019ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ஹிந்தித் திரைப்படம் ‘ஆர்ட்டிக்கிள் 15’.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வைத்துள்ளார். அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்திற்குப் பிறகு இப்படத்தை அவர் தயாரிக்க உள்ளதாகத் தெரிகிறது.
படத்தில் கதாநாயகனாக நடிக்க உதயநிதி ஸ்டாலினை அணுகி உள்ளார்கள். இப்படத்தை ‘கனா’ படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும் ‘வலிமை’ படம் முடிந்த பிறகே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்.
Tags: article 15 udhayanidhi stalin