டைட்டில் சர்ச்சையில் நயன்தாராவின் ‘அன்னபூரணி’

நயன்தாராவின் 75வது படமாக ‘அன்னபூரணி’ என்ற பெயரை படக்குழுவினர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தமன் இசையில், நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிக்கும் படம் இது.

‘அன்னபூரணி’ என்ற தலைப்பில் கடந்த வருடம் ஒரு படத்தை அறிவித்திருந்தார்கள். ‘ஜெய் பீம்’ படத்தில் நடித்த லிஜோமோள் ஜோஸ், லாஸ்லியா, ஹரிகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்க லயனல் ஜோஷ்வா இயக்கத்தில் உருவாகி வரும் படம் அது.

அப்படம் இன்னும் வெளியாகாத நிலையில் நயன்தாராவின் படத்திற்கும் அதே பெயரை வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தத் தலைப்பு  குறித்து இயக்குனல் லயனல் ஜோஷ்வா அவரது பேஸ்புக்கில், “என்னுடைய தலைப்பைப் போலவே ‘அன்னபூரணி’ என்ற தலைப்பைப் பயன்படுத்தி சூப்பர் ஸ்டாருடன் மற்றொரு பெரிய பட்ஜெட் படம் உருவாக உள்ளது. எங்களது படம் பட்ஜெட்டிலும், உள்ளடக்கத்திலும் வேறுபடலாம். இருப்பினும் இது சற்று வருத்தமாக இருக்கிறது. ஆனாலும், ஹேய்…சிறந்த மனதுகள் ஒரே மாதிரியாக நினைக்கின்றன இல்லையா, அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்,” என பெரிய மனதுடன் பதிவிட்டுள்ளார்.

Read Previous

விஜய் 68 – ‘டைம் டிராவல்’ கதையா ?

Read Next

”பிரம்ம முகூர்த்தம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு