விஜய் 68 – ‘டைம் டிராவல்’ கதையா ?

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன், யோகிபாபு, ஜெயராம் மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 68வது படத்தின் பூஜை வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. படத்தில் நடிக்கும் கலைஞர்களைப் பற்றியும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இப்படத்தின் கதை ‘டைம் டிராவல்’ கதை என தகவல் வெளியாகியுள்ளது. அதனால்தான், சமீபத்தில் விஜய், வெங்கட்பிரபு ஆகியோர் அமெரிக்காவிற்குச் சென்று அதற்குரிய சில விஷயங்களைப் பார்வையிட்டு வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். வழக்கமான ஆக்ஷன் மசாலா கதைகளில் நடித்து போரடித்துவிட்டது என்பதால் இப்படிப்பட்ட ஒரு கதையை விஜய் தேர்வு செய்துள்ளாராம்.

விஜய் 68ல் இவ்வளவு நடிகர்கள், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

வெங்கட்பிரபு இதற்கு முன்பு சிம்பு நடிக்க இயக்கிய ‘மாநாடு’ படம் டைம் லூப் கதையாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. அதனால், விஜய் 68 படத்தையும் அவர் சிறப்பாகவே இயக்குவார் என்று ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

Read Previous

நவீன காதல் கதை ”காதல் என்பது பொதுவுடமை”

Read Next

டைட்டில் சர்ச்சையில் நயன்தாராவின் ‘அன்னபூரணி’

Most Popular