பிரசாந்தின் ”அந்தகன்” படத்தில் அனிருத் & பிரபுதேவா

 

டிகர் பிரஷாந்த் நடித்துவரும் அந்தகன் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நடிகர்களுடன், தயாரித்து இயக்கி வருகிறார் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன். 

இப்படத்தில் “டோர்ரா புஜ்ஜி” என்ற பாடலை ராக்ஸ்டார் அனிருத் மற்றும் மக்கள் செல்வன் விஜயசேதுபதி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு நடனம் அமைத்து இயக்க நடனபுயல் பிரபுதேவா இசைந்துள்ளார். 

பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சி படமான உடனே அந்தகன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது. 

மேலும், இந்த படத்தை கலைப்புலி S தாணு வெளியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Previous

5 மொழிகளில் சுதீர் பாபு நடிக்கும் “ஹரோம் ஹரா”

Read Next

கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் “கோஸ்டி”

Most Popular