5 மொழிகளில் சுதீர் பாபு நடிக்கும் “ஹரோம் ஹரா”

 

'செஹரி' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹரோம் ஹரா'. இதில் 'நைட்ரோ ஸ்டார்' சுதீர் பாபு கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். 1989 காலகட்டத்திய பீரியட் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடு தயாரிக்கிறார். 

தற்போது இந்த படத்திற்கு ' ஹரோம் ஹரா'  என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக காணொளி ஒன்றும் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. படத்தை பற்றிய கூடுதல் விவரங்கள்  விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

https://youtu.be/s1wwDC-mYQs 

Read Previous

தக்ஸ் திரைப்படத்தைக் கைப்பற்றிய சோனி மியூசிக்

Read Next

பிரசாந்தின் ”அந்தகன்” படத்தில் அனிருத் & பிரபுதேவா