ஜிவி பிரகாஷ்குமார், கௌதம் மேனன் மீண்டும் இணையும் ‘13’

மெட்ராஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, நந்தகோபால் வழங்க, ஜிவி பிரகாஷ்குமார், கௌதம் மேனன் நடிக்கும் புதிய படம் ‘13’.

ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றது. அக்கூட்டணி மீண்டும் இணையும் படம்தான் ‘13’.

ஒரு மர்மமான விசாரணை, திகில் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விவேக் இயக்குகிறார். ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சித்து குமார் இசையமைக்க, மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். காஸ்ட்ரோ எடிட்டராகவும், ராபர்ட் கலை இயக்குனராகவும் இப்படத்தில் அறிமுகமாகிறரகள். 

ஆடை வடிவமைப்பாளர்- ஹினா (கொலைகாரன், பாக்ஸர், முன்னறிவாளன், கோட்டேஷன் கேங் புகழ்), ஸ்டண்ட் மாஸ்டர் – ரக்கர் ராம் (மரகத நாணயம், சிக்சர், ஓ மை கடவுளே, பிசாசு 2, சட்டம் என் கயில், பீட்சா 3), நடன இயக்குனர் – சந்தோஷ் (மேயாத மான், நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், நட்பே துணை, சிறை), ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

Read Previous

போத்தனூர் தபால் நிலையம் – விமர்சனம்

Read Next

மனிதனுக்கும், நாய்க்குமான உணர்வைச் சொல்லும் ‘777 சார்லி’

Most Popular