50வது நாளில் ‘காக்கி சட்டை’

‘எதிர் நீச்சல்’ வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குனர் துரை செந்தில்குமார், சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்த ‘காக்கி சட்டை’ படம் பிப்ரவரி மாதம் 27ம் தேதி வெளியானது.

உலகக் கோப்பை கிரிக்கெட், பரீட்சை ஆரம்பமான நேரம் ஆகியவற்றையும் மீறி அந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே மாபெரும் வசூலை அள்ளியது.

இன்றுடன் வெற்றிகரமாக 50வது நாளைத் தொட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக ஓடி படத்தை வாங்கியவர்களுக்கும் திரையிட்டவர்களுக்கும் நல்ல லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ‘ரஜினி முருகன்’ படமும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு பொன்ராம், சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ள ‘ரஜினி முருகன்’ படம் தயாரிப்பில் இருக்கும் போதே சுமார் 40 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் ஆகியுள்ளது என்று திரையுலக வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

‘ரஜினி முருகன்’ ஜுலை மாதம் 17ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ஓ காதல் கண்மணி – விமர்சனம்

Read Next

காஞ்சனா 2 – விமர்சனம்