1500 திரையரங்குகளில் ‘உத்தம வில்லன்’…

‘விஸ்வரூபம்’ படத்தின் பரபரப்பான வெற்றிக்குப் பிறகு சுமார் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்து மே 1ம் தேதி வெளிவர உள்ள படம் ‘உத்தம வில்லன்’.

இப்படம் உலகம் முழுவதும் 1500 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாக உள்ளது. அதில் பல்வேறு திரையரங்குகளில் முன் பதிவு ஆரம்பமாகி விட்டது. பெரும்பாலான திரையரங்குகளில் முதல் மூன்று நாட்களுக்கான முன்பதிவு நடந்து முடிந்து விட்டது.

ரசிகர்கள் மத்தியில் ‘உத்தம வில்லன்’ படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது படத் தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் நல்ல மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

Read Previous

ஜீ தமிழ் – 50வது அத்தியாயத்தில் ‘அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்’

Read Next

கமல் சார் ஆசிரியர், நான் மாணவன் – ஜிப்ரான்