ராகவா லாரன்ஸ் இயக்கும் புதிய படம்

‘முனி, காஞ்சனா, காஞ்சனா 2’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராகவா லாரன்ஸ் அடுத்து வேந்தர் மூவீஸ் நிறுவனத்திற்காக புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’, விஷால் நடித்த ‘பூஜை, நான் சிகப்பு மனிதன்’, உள்ளிட்ட பல படங்களை வெளியிட்ட இந்நிறுவனம் தற்போது விஷால் நடித்து வரும் ‘பாயும் புலி’ படத்தைத் தயாரித்து வருகிறது.

இந்த படத்திற்கடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு இன்று முறைப்படி வெளியிடப்பட்டது.

வேந்தர் மூவீஸ் சார்பாக எஸ்.மதன் தயாரிக்கும் இந்தப் படம் முழுமையான ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது.

படத்தில் நடிக்கும் கதாநாயகி, மற்ற நட்சத்திரங்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாக உள்ளது.

Read Previous

‘லிங்கா’ விவகாரம், திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்…

Read Next

‘லிங்கா’ நஷ்ட விவகாரம், மீண்டும் போராட்டம்…